» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கணிப்பு!

சனி 25, ஏப்ரல் 2026 12:15:10 PM (IST)

'2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எங்களுக்குத்தான்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தம்ப்ஸ் அப் காட்டிச் சென்றார். 

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், 'வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், 'வெற்றி வாய்ப்பு எங்களுக்குத்தான்' என்பதுபோல தம்ப்ஸ் அப் காட்டிச் சென்றார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 3 முதல் 4 நாள்களுக்கு ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory