» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!

வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)



குமரி மாவட்டம் தக்கலையில் போலீசாரின் வாகன சோதனையில் 20 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மதுவிலக்குத் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா மேற்பார்வையில், ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மறைத்து வைத்திருந்த 20 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், பிடிபட்ட நபர் நாகர்கோவில் காமராஜபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப் ராஜ் என்பவரது மகன் ஜெரின் ஜோஸ் (37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரைக் கைது செய்து, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கக் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory