» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

வியாழன் 19, மார்ச் 2026 5:08:32 PM (IST)

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை விஞ்சி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிக்கையின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு மற்றும் வளர்ச்சி விவரங்கள் வருமாறு:

இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 21.84% பங்கினை வகிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 29% உயர்ந்துள்ளது. ஏற்றுமதி மதிப்பு: 2020-2021 நிதியாண்டில் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி, 2024-2025 நிதியாண்டில் 7,997.17 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி! குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் இந்த உயர்வு சாத்தியமாகியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84% பங்களிக்கிறது. இந்தச் சாதனைகளைச் சொல்வது நாமல்ல, மத்திய அரசு! சாதனைகளைச் சொல்லி ஒன்றாக வெல்வோம்!" இவ்வாறு முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory