» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 19, மார்ச் 2026 4:23:10 PM (IST)
தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்தார்."விஜய் கட்சியிலிருந்து எங்களுடன் யாரும் கூட்டணிக்காகப் பேசவில்லை; நாங்களும் அவர்களிடம் பேசவில்லை. 'பிம்பம், கம்பம்' என்பதெல்லாம் தேவையற்ற பேச்சுக்கள். மேலும், 80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என ஆஃபர் தருவதாகக் கூறப்படும் ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது."
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓரிரு நாட்களில் தமிழகம் வரவுள்ளதாகவும், அவர் வரும்போது முறையான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் மோடி விரைவில் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூருக்கு வரவுள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அமலாக்கத் துறை (ED) மற்றும் வருமான வரித் துறை (IT) ஆகியவற்றை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என்று அவர் கூறினார்.
இவை அனைத்தும் சுதந்திரமான அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே விசாரணை நடக்கும். விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவர் மீது வருமான வரித் துறை தொடர்பான வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலுக்கு முன்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் மீதுதான் இப்போது விசாரணை நடக்கிறது."
"திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் மக்களும் அவர்கள் இடங்களைக் குறைப்பார்கள். பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. ஆனால், 'இந்துக்கள் வாக்குகள் வேண்டாம்' என்று கூறும் திமுகதான் மதவாதக் கட்சி. பாஜக அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கியே செயல்படுகிறது" என்று அவர் சாடினார்.
செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், அனைவருக்கும் தனது 'யுகாதி' திருநாள் வாழ்த்துகளைத் தெலுங்கு மொழியில் கூறி நயினார் நாகேந்திரன் விடைபெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 19, மார்ச் 2026 5:08:32 PM (IST)

எடப்பாடி கே. பழனிசாமி டெல்லி சென்றால் என்ன தவறு? - தமிழிசை காட்டம்
வியாழன் 19, மார்ச் 2026 3:59:11 PM (IST)

நெல்லையில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 3:28:49 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)








