» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!

புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி ஊராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் ராஜேஷ் என்பவர் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்தார். மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை முறையாக அரசு கணக்கில் செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் வரை ராஜேஷ் மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் குறித்துத் துறை ரீதியான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அரசுப் பணத்தைக் கையாடல் செய்தது மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நிர்வாகத் திறக்குறைவு மற்றும் நிதி மோசடி புகாரில் சிக்கிய ஊராட்சி செயலாளர் ராஜேஷைப் பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை அப்பகுதி ஊராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory