» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மோதல்: கிள்ளியூர் தொகுதி விவகாரத்தில் கைகலப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:52:53 PM (IST)
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலின் போது, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் திமுக வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கியுள்ளது.
இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான நேர்காணல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி தொடர்பாக இருவேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன:
கடந்த பல ஆண்டுகளாக கிள்ளியூர் தொகுதி காங்கிரசுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறை அங்கு திமுக நேரடியாகப் போட்டியிட வேண்டும்" என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். கூட்டணி தர்மத்தின்படி மீண்டும் காங்கிரசுக்கே இந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும். காங்கிரசுக்கு ஒதுக்கினாலும் திமுகவினர் கடுமையாக உழைத்து வெற்றி பெறச் செய்வோம்" என மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்.
முதலமைச்சர் முன்னிலையில் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவிட்டு வெளியே வந்த இரு தரப்பு நிர்வாகிகளிடையே அண்ணா அறிவாலய வளாகத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் கைகலப்பாக மாறியது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நிர்வாகிகள் நடுரோட்டில் மோதிக்கொண்ட இந்தச் சம்பவத்தால் அண்ணா அறிவாலயத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம் முழுவதும் சோதனை தீவிரம்: 3 நாட்களில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 5:45:13 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - தணிக்கை வாரியம் அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 5:17:30 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)








