» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - தணிக்கை வாரியம் அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 5:17:30 PM (IST)

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும் எனத் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகப் பேசப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரிலீஸ் குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும் எனத் தணிக்கை வாரியம் (CBFC) தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம், அரசியல் பின்னணி கொண்ட கதைக் கருவைக் கொண்டது. ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்ட இப்படம், தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனைகளால் தள்ளிப்போனது.
இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நீதிமன்றம் சென்றது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை மறுஆய்வுக் குழுவிற்கு (Reviving Committee) அனுப்பியது. மார்ச் 9-ம் தேதி நடைபெறவிருந்த மறுஆய்வு, உறுப்பினர்களின் உடல்நலக்குறைவால் தள்ளிவைக்கப்பட்டு, இறுதியாக நேற்று (மார்ச் 17) மும்பையில் நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மறுஆய்வில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்பட்டது. இருப்பினும், தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், படத்தில் இடம்பெற்றுள்ள நேரடி அரசியல் வசனங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான காட்சிகள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
குறிப்பாக, நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக இயங்கி வருவதால், அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது சிக்கலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்கும் எனத் தணிக்கை வாரியம் கைவிரித்துள்ளது.
படத்தைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் பார்வையிடத் தணிக்கை வாரியம் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் தலையீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் 'ஜனநாயகன்' படக்குழு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை படம் வெளியாக வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாவதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம் முழுவதும் சோதனை தீவிரம்: 3 நாட்களில் ரூ.42.65 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 5:45:13 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மோதல்: கிள்ளியூர் தொகுதி விவகாரத்தில் கைகலப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:52:53 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)








