» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகை குறித்த சர்ச்சை பேச்சு: சி.வி. சண்முகத்திற்கு எதிராகக் கிளம்பும் கண்டனக் குரல்கள்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:31:33 PM (IST)
தமிழக முதல்வரின் திட்டத்தை விமர்சிப்பதாகக் கூறி, நடிகை ஒருவரைப் பற்றி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் பொதுமேடையில் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்' என்றார். ஆனால் ஸ்டாலின் ஒருபடி மேலே போய் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்கிறார்.
எனக்கு ஒரு குறிப்பிட்ட நடிகை (பெயரைக் குறிப்பிட்டு) வேண்டும், அவரை எனக்குக் கல்யாணம் செய்து வையுங்கள் என்று யாராவது கேட்டால், அதனை முதல்வர் நிறைவேற்றித் தருவாரா?" இவ்வாறு அவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்தக் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே. பாலபாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்துக் கூறியதாவது: ஒரு பெண்ணைப் பொதுவெளியில் இழிவுபடுத்தும் வகையில் பேசுவது கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்தப் பெண்களையும் கொச்சைப்படுத்தும் செயல்.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் சி.வி. சண்முகம் தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். தனது நாகரிகமற்ற பேச்சுக்காகத் தமிழ்நாட்டுப் பெண்களிடம் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - தணிக்கை வாரியம் அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 5:17:30 PM (IST)

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மோதல்: கிள்ளியூர் தொகுதி விவகாரத்தில் கைகலப்பு!
புதன் 18, மார்ச் 2026 4:52:53 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் 2026: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதச் சங்கிலி!
புதன் 18, மார்ச் 2026 3:28:16 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனை: இதுவரை ரூ.10.18 லட்சம் பறிமுதல்!
புதன் 18, மார்ச் 2026 12:40:24 PM (IST)

கொல்லங்கோடு பத்திரக்காளி அம்மன் கோயில் திருவிழா: மார்ச் 22-ல் மதுபானக் கடைகள் மூட உத்தரவு
புதன் 18, மார்ச் 2026 12:31:24 PM (IST)








