» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:31:19 PM (IST)
அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே சமீபத்தில் புதுக்கோட்டை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே சமீபத்தில் புதுக்கோட்டை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அமித்ஷாவை சென்று சந்திக்கவில்லை. அவருக்கு பதிலாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2 முறை சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது, சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலை பெயர்கள் குறிப்பிட்டு அமித்ஷா வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதிகளின் எண்ணிக்கையும் 50-க்கும் மேல் பட்டியலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. முக்கியமாக, தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் டெல்லி திரும்பிய நிலையில், நேற்று இரவு அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை தமிழகம் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அவரிடம் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைத்துக்கொள்வீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சேரும்போது உங்களை அழைத்து சொல்வோம். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
JAY JY JAYJan 8, 2026 - 02:30:42 PM | Posted IP 104.2*****
இந்த டயர் நக்கியை சேர்க்கவேண்டாம். அதிமுகவை விடியலிடம் விற்று விடுவார்.மிகப்பெரிய சுயநலவாதி, பதவிக்காக விடியல் தலைவர்கள் கார் டயரை கூட கும்பிடுவார்
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
திங்கள் 8, ஜூன் 2026 10:37:14 AM (IST)

தவெக ஆட்சி இன்னும் 3 மாதமாவது தாங்குமா என்பது கேள்விக்குறி! – மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
திங்கள் 8, ஜூன் 2026 10:26:13 AM (IST)

நெல்லை அருகே இருதரப்பு மோதலில் பெண் உள்பட 6 பேருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: 7 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:57:56 AM (IST)

நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி-யாக திருநாவுக்கரசு பொறுப்பேற்பு: சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உறுதி!
ஞாயிறு 7, ஜூன் 2026 7:50:29 PM (IST)

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)











ஆமாJan 9, 2026 - 12:19:48 PM | Posted IP 172.7*****