» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஞாயிறு 15, மார்ச் 2026 10:35:31 AM (IST)

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்தச் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் 01.12.2023 அன்று பெற்று வந்த ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

01.12.2023 அன்று 10 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் கூடுதலாக 3 சதவீதம் பணிப்பலன் ஊதிய உயர்வு வழங்கப்படும். அலுவலர்களுக்கு அவர்களின் நிலையைப் பொறுத்து ரூ. 3,000 முதல் ரூ. 7,000 வரை சிறப்புப் படி வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 01.12.2023 முதல் நடைமுறைக்கு வருவதாகக் கருதப்படும். 

இதற்கான நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:  01.12.2025 முதல் பணப்பலன்கள் வழங்கப்படும். 01.12.2023 முதல் 30.11.2025 வரையிலான இடைப்பட்ட காலத்திற்கு, மாதத்திற்கு ரூ. 500 வீதம் மொத்தம் 24 மாதங்களுக்குக் கருணைத் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.01.12.2025 முதல் 28.02.2026 வரை வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மின்வாரியத் தலைவர் முன்னிலையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களும், அலுவலர்களும் பயன்பெறுவார்கள் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory