» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!

ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

நிதி நிறுவன மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத் தலைவர் ஏ.எம். மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஏ.எம். மூர்த்தி, நெல்லையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 25 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அமலாக்கத்துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது.

நேற்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளியை வரவழைத்த அதிகாரிகள், நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடி மற்றும் பணப்பரிமாற்ற விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இருவரையும் அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூர்த்தியின் மனைவி சுதா, நெல்லை மாநகராட்சியில் திமுக பெண் கவுன்சிலராகவும், வரிவிதிப்பு மற்றும் பணிக்குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மூர்த்தி சில தினங்களுக்கு முன்புதான் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவைச் சந்தித்து, தனது கட்சியின் ஆதரவை திமுக கூட்டணிக்குத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory