» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.3 லட்சத்தில் நினைவிடம்: பணிகள் தீவிரம்!

வெள்ளி 24, ஜனவரி 2025 12:45:26 PM (IST)



நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ. 3 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கும் பணி தாமரைகுளம் பகுதியில் துவங்கி நடந்து வருகிறது.

நெல்லையப்பர் கோயிலில் (56) வயதுடைய காந்திமதி என்ற பெண்யானை இருந்தது. கோயில் ஆகம விதிமுறைப்படி சுவாமி, அம்பாளுக்கு தினமும் அபிஷேகத்திற்கு தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவது, கோயில் திருவிழாக்களில் கொடியேற்றத்தின் போது கொடி பட்டம் வீதிவலம் எடுத்து வருவது, ஆனித்தேரோட்டத்தின் போது சுவாமி தேரின் முன்பாக அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக ரதவீதிகளை வலம் வருவது.

தினமும் கோயிலில் அதிகாலையில் நடைபெறும் கஜபூஜையில் பங்குகொள்வது காந்திமதியின் அன்றாட வேலையாக இருந்து வந்தது. நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் செல்லப் பிள்ளையாக விளங்கிவந்த காந்திமதி யானைக்கு உடல்நலக்குறைவால் கடந்த 12ம் தேதி காலையில் உயிரிழந்தது.

இதைத்தொடர்ந்து டவுன் ஆர்ச் அருகில் உள்ள தாமரை குளத்தில் காந்திமதி யானை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பக்தர்களின் செல்லப்பிள்ளை காந்திமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி உபயதாரர்கள், கோயில் நிதி உள்பட ரூ. 3 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

யானை நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் கூலிங் சீட் மேற்கூறையும், கல்தளம், சுற்றிலும் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து நினைவிடம் அமைப்பதற்காக காந்திமதி யானை புதைக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் காங்கிரீட் மூலம் 4 கம்பிகள் நடப்பட்டது.

இதனை ெதாடர்ந்து நினைவிடத்தை சுற்றிலும் கல்தளம் அமைத்து கம்பி வேலியும் அமைக்கும் பணிநடக்கிறது. இதற்காக கோயில் நிதி, உபயதாரர்கள் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory