» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வில்லுக்குறியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53-வது கிளை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா திறந்து வைத்தார்

வியாழன் 23, ஜனவரி 2025 4:16:13 PM (IST)



வில்லுக்குறி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53-வது கிளையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 53வது கிளையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (23.01.2025) குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து தெரிவிக்கையில்- தமிழ்நாட்டில் அதிகமான வங்கி கிளைகளை கொண்ட பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கன்னியாகுமரி மாவட்டத்தின் 53-வது கிளையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

மேலும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடனுதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மேலும் பொதுமக்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று அவதிப்படுவதை தவிர்த்து அரசு வங்கிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் வரபிரசாத், முதன்மை மேலாளர்கள் சண்முக சுந்தர பாண்டியன், சரவணகுமார் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செல்வராஜ், வில்லுக்குறி பஞ்சாயத்து செயல் அலுவலர், பஞ்சாயத்து தலைவர், வணிகர் சங்க தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital




Thoothukudi Business Directory