» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய குழு : வன அலுவலர் தகவல்!

வியாழன் 23, ஜனவரி 2025 5:44:05 PM (IST)



குமரி மாவட்டத்தில் விளைநிலங்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு இம்மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை அழிப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (23.01.2025) மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. ஜனவரி 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்து தெரிவித்தார்கள். கோடைப்பருவ சாகுபடியின் நன்மைகள் குறித்த காணொளி காட்சி ஒளிப்பரப்பப்பட்டது. 

கடந்த டிசம்பர் 2024 மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 190 மனுக்களுக்கான பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் சானல்களில் தண்ணீர்வரத்து மற்றும் குளங்களை தூர்வாருதல், நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. நிலவியல் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்ற சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தெரிவித்தார்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அவர்களுக்கு கருத்துரு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குத்தகை விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வழங்க சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் சான்று வழங்க வேண்டி அறிவுறுத்தப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்கள்.விளைநிலங்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு இம்மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளை அழிப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

நீர்ப்பாசன சங்க தலைவர் தேர்தல் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சங்க தலைவர்களுக்கு அடையாள அட்டை தர வேண்டும் எனவும் வைத்த கோரிக்கைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் எனவும் சங்க தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார். செண்பகராமன்புதுர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டகை அமைக்க கோரியதற்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தெங்கம்புதூர் கால்வாயில் பிப்ரவரி 28 வரை தண்ணீர் நீர்ப்பாசனத்திற்கு விநியோகம் செய்யப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி, மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை செயற்பொறியாளர் பாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், துறை அலுவலர்கள், மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory