» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!

வியாழன் 23, ஜனவரி 2025 4:35:29 PM (IST)



‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டத்திலும் முதற்கட்ட சுற்று நிறைவுபெற்று, இரண்டாம் சுற்றாக மானூர் வட்டம் ஆய்வு செய்யப்பட்டு இன்றையதினம் இரண்டாம் வட்டமாக அம்பாசமுத்திரம் வட்டத்திற்குட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் பதிவு புத்தகத்தில் பதிவு செய்த நோயாளிகளுக்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் குறித்து விசாரித்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, மருத்துவர்களின் வருகை மற்றும் செயல்பாடுகள், மருந்துகள் இருப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, மணிமுத்தாறு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், மணிமுத்தாறு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, மணிமுத்தாறு இந்திராகாலனி புதியதாக கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையத்தின் கட்டுமானப் பணிகளையும், மேலஏர்மாள்புரத்தில் 15-வது நிதி ஆணையத்தின் சுகாதார மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்தின் பணிகளையும், 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், இலங்கைத் தமிழர் நலன் திட்டத்தின் கீழ் ரூ.33.50 இலட்சம் செலவில் ஆலடியூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பேவர் பிளாக் சாலையினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தலைதளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் அடிப்படை வசதிகளான 75 படுக்கைகள் வசதி உள்ளது. அறுவை அரங்குள் 3, அவசர சிகிச்சை பிரிவு, பெண்கள் மற்றும் ஆண்கள் வார்டு, பச்சிளம் குழந்தை வார்டு, எக்.ஸ்.ரே, சிடி ஸ்கேன், ரத்த வங்கி, புறநோயாளிகள் பிரிவு மற்றும் தானியங்கி உள்ளடக்கிய கூடுதல் கட்டடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணியினை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்றையதினம் அம்பாசமுத்திரம் வட்டத்தில், வெள்ளாங்குழி, வைராவிகுளம் கிராம ஊராட்சி, அயன்சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் நகராட்சி, பள்ளக்கால் கிராம ஊராட்சி, அயன்திருவாலீஸ்வரம், பிரம்மதேசம் கிராம ஊராட்சிகள், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, இடைகால், ரெங்கசமுத்திரம், மன்னார்கோவில், மணிமுத்தாறு, சிவந்திபுரம், தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அனைத்துத்துறை அலுவலர்கள் காலை முதல் மாலை வரை கள ஆய்வு மேற்கொண்டது குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்ட பணிகளின் கருத்துக்கள் குறித்தும் அலுவலர்களுடன் விரிவாக கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் வானவில் பாலின மைய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இடைகால் அம்பாசமுத்திரம், பொட்டல்புதூர் சந்திப்பு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திட்ட இயக்குநர்கள் சரவணன் (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வைகுண்டம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory