» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பயணாளிகளுடன் ஆட்சியர் சந்திப்பு!

செவ்வாய் 21, ஜனவரி 2025 3:51:18 PM (IST)



குமரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் வாயிலாக பயனடைந்த பயனாளிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் சந்தித்து பயன்கள் குறித்து கேட்டறிந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகத்தின் கடைகோடி கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, பிற மாநிலங்களே வியந்து பாராட்டும் படியும், இது நமது அரசு என்று பொதுமக்கள் அனைவரும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். 

"மக்களைத் தேடி மருத்துவம்”திட்டம் பொது மக்கள் குடியிருக்கும் வீட்டினை தேடி அவர்களுக்கு சேவை செய்யும் ஒரு புனிதமான திட்டமாகும். இத்திட்டத்தின் வாயிலாக பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்” (NCD) நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், வயது முதிர்ந்த நபர்களுக்கு சேவை செய்தல், அவர்களுக்கு முட நீக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தல், தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம் ஆதரவு சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய சேவை போன்ற நல்ல நோக்கத்துடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற புதிய திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் குறிப்பாக 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையானமருத்துவம் திட்டத்தின் மூலம், அதற்கு பரிசோதனை செய்து அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாயநலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
 
இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, பரிசோதனை மேற்கொண்டு, நோய் பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களில் உயர் இரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்ட 2,70,174 நபர்களுக்கும், நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 1,46,765 நபர்களுக்கும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 1,43,029 நபர்களுக்கும், பல் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்ட 11,150 நபர்களுக்கும், உடற்பயிற்சி சிகிச்சை (பிசியோதெரபி) வாயிலாக 11,647 நபர்களுக்கு மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory