» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பராமரிப்பு பணி: 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 22, ஜனவரி 2025 9:08:21 AM (IST)

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கோட்டையில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16848), வரும் 24, 25, 27, 28, 30 ஆகிய தேதிகளில், விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மயிலாடுதுறை செல்லும். கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையம் செல்லாது.

மறுமார்க்கமாக, மயிலாடுதுறையில் இருந்து வரும் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16847), வரும் 30-ந்தேதி, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக செங்கோட்டை செல்லும். கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரயில் நிலையம் செல்லாது.

நாகர்கோவில் - கோவை

* நாகர்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321), வரும் 25,28 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர், ஈரோடு வழியாக செல்லும். திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பாத்துரை, திண்டுக்கல் செல்லாது. மறுமார்க்கமாக, கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16322), வரும் 25,28 ஆகிய தேதிகளில் இதே வழித்தடம் வழியாக செல்லும்.

* நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (16340), வரும் 28-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மும்பை செல்லும். மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது.

* நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரயில் (16352), வரும் 30-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக மும்பை செல்லும். மதுரை மற்றும் திண்டுக்கல் செல்லாது.

குருவாயூர் - எழும்பூர்

* குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128), வரும் 24, 27, 29 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் வரும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ரயில் நிலையம் செல்லாது.

* கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் (12666), வரும் 25-ந்தேதி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

* நாகர்கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காச்சிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16354), வரும் 25-ந்தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக காச்சிகுடா செல்லும். மதுரை, திண்டுக்கல் செல்லாது.

* உத்தரபிரதேச மாநிலம் பனாரசில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயில் (06368), வரும் 26-ந்தேதி, திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் ஆகிய மாற்றுப்பாதை வழியாக செல்லும். திண்டுக்கல் மற்றும் மதுரை செல்லாது.

பகுதி நேர ரத்து - புறப்படும் இடம் மாற்றம்

* சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (22671), வரும் 25, 28 ஆகிய தேதிகளில் திருச்சி- மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 25, 28 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும்.

* ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிஸ் ரயில் (16845), வரும் 24, 27 ஆகிய தேதிகளில் கரூர் - செங்கோட்டை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து வரும் 25, 28 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16846), அதற்கு மாற்றாக கரூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும்.

* குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் சிறப்பு ரயில் (09520), வரும் 27-ந்தேதி விழுப்புரம் - மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 31-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு ஓகா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (09519), அதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு ஓகா செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory