» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்?: சீமான் கேள்வி
செவ்வாய் 21, ஜனவரி 2025 5:00:58 PM (IST)
தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பேசினார்.
விழுப்புரம் அருகேயுள்ள பூரி குடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கள் விடுதலை இயக்க தலைவர் நல்லசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது மாநாட்டு மேடையிலையே கள்ளை சந்தைப்படுத்தும் விதமாக பனை ஓலை பட்டையில் 'கள்' குடித்து சீமான் ஆதரவு தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஈரோடு தேர்தல் களத்தில் 2 பேர்தான் போட்டி. தேர்தல் களம் எங்களுக்கானது என்றுதான் நாங்கள் நினைப்போம். எந்த களமாக இருந்தாலும் எங்களுடையதாக மாற்றுவதுவதுதான் எங்களது களப்பணி. திமுகவை எதிர்த்து நான் ஒருவன்தானே தனியாக நிற்கிறேன். நீங்கள் இத்தனை அமைச்சர்கள், இத்தனை கட்சிகளை கூட்டணியாக வைத்துக்கொண்டு எதற்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்கின்றீர்கள்.
பெரியார் என பேசும் பெருமக்கள், பெரியார் பிறந்த மண் என சொல்லும் பெருமக்கள்; ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரைப் பேசியதை வைத்து வாக்கு கேளுங்களேன். சீமான் பெரியாரை விமர்சித்துவிட்டார் அவருக்கு வாக்களிக்காதீர்கள் என ஒருமுறை பேசுங்களேன். இப்போது பெரியாரைச் சொல்லி வாக்கு வாங்கப்போகிறீர்களா?. காந்தி படத்தினைக் காட்டி வாக்கு வாங்கப்போகிறீர்களா?. எங்கே உன் கோட்பாடு?. எங்கே உன் கொள்கை?. கொள்கை வழிநின்று ஆட்சி செய்பவர்களுக்கு கோடிகளைக் கொட்டி வாக்கைப் பறிக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது.
கள்ளுக் கடைகளை திறந்தால் டாஸ்மாக் விற்பனை படுத்துவிடும்; கள் என்ற பெயர்தான் பிரச்சினை எனில், அதை பனம்பால் மூலிகைச் சாறு என பெயர் வைக்கலாம். தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்தால் சட்டம் ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்?. ஒரே நாளில் 100 வழக்குகளை வாங்கியவன்; வடிவேலு சொல்லுவதுபோல் சிறைப்பறவை நான். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)










