» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தடையை மீறி பேரணி: குஷ்பு உள்பட பாஜக மகளிர் அணியினர் கைது!
வெள்ளி 3, ஜனவரி 2025 12:19:51 PM (IST)
சென்னையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜக மகளிரணியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் இன்று (ஜன. 3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரை முதல் சென்னை வரை பேரணி நடத்த மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. எனினும் தடையை மீறி மதுரையில் பாஜக மகளிரணித் தலைவர் உமாரதி தலைமையில் குஷ்பு உள்ளிட்ட மகளிர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். பேரணிக்கு அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அனுமதி தரமாட்டார்கள் என்பது முன்பே தெரியும் என்று குஷ்பு கூறியுள்ளார்.