» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் சிறையில் தூத்துக்குடி கைதியிடம் செல்போன் பறிமுதல் : போலீஸ் விசாரணை

திங்கள் 6, ஜனவரி 2025 8:09:13 AM (IST)

நாகர்கோவிலில் உள்ள சிறையில் தூத்துக்குடி கைதி பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கண்காணிப்பாளராக சம்பத் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது தலைமையில் உதவி சிறை அலுவலர் அருண்குமார் மற்றும் சிறை காவலர்கள் ஆகியோர் மாவட்ட சிறையில் உள்ள புதிய கட்டிடத்தின் 7-ம் எண் கைதி அறையில் சோதனை மேற்கொண்டனர். 

அங்கு தூத்துக்குடி ராஜாமணிபுரம் பெருமாள் தாணுகோவில் தெருவைச் சேர்ந்த முத்துராஜ் (23) என்ற கைதி இருந்தார். அங்கிருந்த டி.வி.யின் பின்புறம் பேட்டரியுடன் கூடிய செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த செல்போனில் சிம் கார்டு இல்லை. கைதி முத்துராஜ் அந்த செல்போனை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறை காவலர்கள் அந்த செல்போனை கைப்பற்றினர்.

பின்னர் இதுதொடர்பாக சிறை சூப்பிரண்டு சம்பத் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் கைதி முத்துராஜ் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைதி முத்துராஜ் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்ட நிலையில் சிம்கார்டு இல்லாததால் அந்த சிம்கார்டு என்ன ஆனது? என்பது குறித்தும், முத்துராஜ் அந்த செல்போனில் இருந்து சிம்கார்டை பயன்படுத்தி அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசினாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

செல்போனை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் முத்துராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி, ஆறுமுகநேகரி காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறை அதிகாரி சம்பத் தலைமையிலான குழுவினர் மற்ற கைதிகள் அறையிலும் செல்போன் ஏதாவது உள்ளதா? என சோதனை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory