» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? - தமிழிசை கண்டனம்!

செவ்வாய் 7, ஜனவரி 2025 12:07:43 PM (IST)

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையின் மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாகவும், தமிழக முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் மாவட்டத் தலை நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தது எப்படி? என முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது பிரிவினைவாதம் என்று சொன்னால் அதை தமிழக அரசுதான் புதிதாக கற்பிக்க முடியும். வேங்கை வயல் விவகாரம், ஆண்ட பரம்பரை என திமுக அமைச்சரே கூறியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? திமுகவினர்தான் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

கடந்த 10 நாள்களில் ஆயிரக்கணக்கான தலைவர்களும் தொண்டர்களும் கைதானார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆளும் கட்சிக்கு அனுமதியா? எந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்? நாங்கள் 5 நாள்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும்? ஆனால் ஆளும் கட்சியினர் நேற்று அனுமதி பெற்று இன்று போராட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஜனநாயகம் இல்லவே இல்லை' என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital







Thoothukudi Business Directory