» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூடு​தல் ​போலீஸ் பாது​காப்பு

திங்கள் 6, ஜனவரி 2025 10:02:51 AM (IST)

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலை​யில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்​கப்​பட்​ட​தால், தலைமைச் செயல​கத்​தில் கூடு​தல் ​போலீஸ் பாது​காப்பு ​போடப்​பட்​டுள்​ளது.

சென்னை எழும்​பூரில் உள்ள காவல்​துறை தலைமை காவல் கட்டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனை​யில் பேசிய நபர், ‘சென்னை​யில் உள்ள தலைமைச் செயல​கம், டிஜிபி அலுவலகம் ஆகிய​வற்றுக்கு வெடிகுண்டு வைத்​துள்ளேன். அது சற்றுநேரத்​தில் வெடித்​துச் சிதறும். முடிந்​தால் தடுத்​துப்​ பாருங்​கள்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, 2 இடங்களுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி​களுடன் சென்​றனர். தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகம் முழு​வதும் சோதனை மற்றும் ஆய்வு நடத்​தப்​பட்​டது. சந்தேகப்​படும்​படியான பொருட்கள் எதுவும் கிடைக்க​வில்லை.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்தது ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பது தெரியவந்தது. மேலும், மது போதையில் அவர் மிரட்டல் விடுத்தார் என்பதையறிந்த போலீஸார், அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory