» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை மயிலாப்பூரில் தோரணமலை பரம்பரை அறங்காவலருக்கு ஆன்மிக ஒளி விருது

ஞாயிறு 5, ஜனவரி 2025 8:53:24 PM (IST)



சென்னை மயிலாபூர் அன்னை வாராஹி அறக்கட்டளையின் சார்பில் தோரணை மலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமனுக்கு ஆன்மிக ஓளி விருது வழங்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர், தெற்கு மாடவீதி, வள்ளல் விநாயக முதலியார் பொம்மை சத்திரத்தில் அன்னை வாராஹி அறக்கட்டளையின் சார்பில், உலக நன்மைக்காகவும், மக்கள் துயர் தீர்க்கவும், 64 சக்தி ரூபங்களில் வாராஹி திருக்காட்சி நடந்தது. நிகழ்வில், 64 சக்தி ரூபங்களில் வாராஹி காட்சி அளிக்கும் நிகழ்வு, யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

முதல் நாளில் விநாயகர் பூஜையுடன் துவங்கி, கலச ஸ்தாபனம் நடந்தது. பின், 64 வகை வாராஹி திருக்காட்சி படுத்தும் நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து, 1,008 புடவைகளால் வாராஹி சகஸ்ரநாமம் செய்யப்பட்டது. கணபதி ஹோமத்தை தொடர்ந்து, நவக்கிரஹ ஹோமம், காரியசித்தி, வித்யா வாராஹி ஹோமங்கள் நடத்தப்பட்டன. முதல் நாள் மாணவ, மாணவியர் கல்வியில் மேம்பட, வாக்ஹதினி வித்யா வாராஹி பூஜை நடத்தப்பட்டது. அதையடுத்து, ஆண்டாள் திருக்கல்யாணம், கானஸ்மிருதி பஜன் மண்டலி நடந்தது.

இரண்டாம் நாள் விரளி மஞ்சளால் சகஸ்ரநாமம், கல்யாண வாராஹி, சந்தான வாராஹி யாகம் நடந்தது. மாலை திருப்பாவை, அஞ்சன மாருதி பஜன் மண்டலி நடைபெற்றது. தொடர்ந்து ஆன்மிகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதன்படி, தென்காசி மாவட்டம் தோரணை மலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமனுக்கு மதிப்புரு அஸ்வாரூடா ஆன்மிக ஓளி விருது வழங்கப்பட்டது.
 
செண்பகராமன், தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணைமலை முருகன்கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார். தனது தந்தை ஆதிநாராயணனை தொடர்ந்து கடந்த 60 வருடங்களை கடந்த இந்த கோயில் நிர்வாகத்தினை நிர்வகித்து வருகின்றனர். இறைபணியுடன் சமூகப்பணியும் செய்து வருகிறார்.

இப்பகுதி மாணவ மணிகள் பயன்படுத்த 3400 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலகத்தினை உருவாக்கியுள்ளார். போட்டி தேர்வுக்கு தயாராவோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். சீருடை பணியாளர் தேர்வுக்கு தயாராவோர் பயன்படுத்த நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற பயிற்சிக்கும் தோரணமலை அடிவாரத்தில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தில் ஆதிநாராயணன் வாழ்ந்த வீடு அந்த கிராமத்து மாணவ மணிகள் படிக்கும் மாலை நேர கட்டணமில்லா படிப்பகமாக இயங்கி வருகிறது. அந்த கிராமத்தில் செண்பக ராமன் தனது சொந்த நிலத்தில் ஒரு விளையாட்டு திடலும் அமைத்து கொடுத்துள்ளார். தற்போது தோரணமலை அடிவாரத்தில் போட்டி தேர்வுக்கு தயாராவோர் தங்கி படிக்க இலவச விடுதியை துவங்கும் முயற்சியில் உள்ளார்.
 
தோரணமலை பக்தர்களை திரட்டி பல மாணவ மாணவியரை கல்லுரியில் படிக்க வைக்கிறார்.ஏழை பெண்களுக்கு இங்கே திருமணமும் நடத்தி வைக்கிறார். மேற்கண்ட காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாள் தேவி மகாத்மிய பாராயணம், காலை 9:00 மணிக்கு, 64 வகை மூலிகைகள், மந்திரங்களால் வாராஹி யாகம், சாஸ்தா யாகம் நடந்தது. மாலையில் வாராஹி ஆபரண பூஜை, திருப்பாவை, இஸ்கான் சென்னை பக்தர்களின் பூஜைகள் நடந்தன. தினசரி பூஜைகளுடன் மதியம் அன்னதானமும் நடந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory