» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை: பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 3:48:03 PM (IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், "தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் இயல்பை விட 33 சதவீதம் அளவுக்கு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு காலத்தில் பருவமழை 590 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயலை ஒட்டி டிசம்பர் 11-ம் தேதிமுதல் 14-ம் தேதி வரை அதிகனமழை பெய்துள்ளது. நெல்லை, சேலம், தருமபுரி, திருபத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பதிவானது.

2024-ல் 4 புயல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம். 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1,179 மி.மீ. மழை பதிவானது. வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்" என்று அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory