» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பழைய குற்றாலம் அருவியில் 15 நாட்களுக்கு பிறகு அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!

ஞாயிறு 29, டிசம்பர் 2024 9:17:00 AM (IST)

பழைய குற்றாலம் அருவியில் 15 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிக்கரை பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 

மேலும் காங்கிரீட் நடைபாதையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒரு வார காலத்திற்கு பின்னர் அருவிகளில் நீர்வரத்து குறைந்ததால், மெயின் அருவி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஐந்தருவி, புலி அருவி, மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதில் பொதுப்பணித்துறை, வனத்துறை மற்றும் ஆயிரப்பேரி பஞ்சாயத்து இடையே குழப்பம் நீடித்து வந்தது.

இதனால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடை வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பழைய குற்றாலம் அருவிக்கு சென்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory