» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

ஞாயிறு 17, நவம்பர் 2024 10:01:53 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி, குற்றாலம், ஆலங்குளம், செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மத்தளம்பாறை, ஆசாத் நகர், திரவிய நகர், ஆயிரப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்தது. அதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பாதையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது நேற்றும் நீடித்தது. அருவிக்கரை பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory