» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒசூர் சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!
வியாழன் 21, நவம்பர் 2024 12:14:36 PM (IST)
ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்திற்குள் கண்ணன் என்ற வழக்கறிஞரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும், வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ஜெயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், முன்னாள் தலைவர்கள் மரிய ஸ்டிபன், பால ஜனாதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதுபோல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.