» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதானி நிறுவனத்துடன் தமிழக மின்வாரியத்திற்கு எந்த தொடர்பும் இல்லை: செந்தில் பாலாஜி

வியாழன் 21, நவம்பர் 2024 4:24:37 PM (IST)

தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கவுதம் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாக அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி எண்டர்பிரைசஸ் 19 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 15 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்கில், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

இதைத் தொடர்ந்து அதானி விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;

"தமிழ்நாடு மின்சார வாரியத்தை பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்த விதமான வணிக ரீதியான தொடர்பும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. தமிழ்நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு மத்தியில் இருக்கக்கூடிய மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

"சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா" என்பது மத்திய அரசின் நிறுவனம். இந்த நிறுவனத்தோடு தமிழ்நாடு மின்சார வாரியம் 1500 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதுவும் மிக குறைந்த விலையில், அதாவது ரூ.2.61 க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதானி நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதுதொடர்பாக மேலும் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுப்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

அதோNov 21, 2024 - 04:49:47 PM | Posted IP 172.7*****

திருடன் பேச்சை பாருங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory