» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீமான் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் திடீர் வெளிநடப்பு: நெல்லையில் பரபரப்பு

வெள்ளி 15, நவம்பர் 2024 8:19:31 AM (IST)

நெல்லையில் சீமான் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் திடீரென்று வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது, நிர்வாகிகளுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் சிலர் சீமானை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த சாட்டை துரைமுருகன், நிர்வாகிகளை கூட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் லேசான கைகலப்பு ஏற்பட்டது. சீமானும் அவர்களை சமரசப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் முடியாததால் அவரும் நிர்வாகிகளை வெளியே செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், இளைஞர் அணி செயலாளர் பார்வின் ஆகியோரும், அவர்களுடன் சேர்ந்து சிலரும் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடைபெற்றது. ஆனால், இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், நாம் தமிழர் கட்சி கூட்டம் எந்த சலசலப்பும் இன்றி அமைதியாக நடைபெற்றதாக தெவித்தனர். நெல்லையில் சீமான் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் திடீரென்று வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory