» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இருசக்கர வாகனத்தில் 4 நபர்கள் பயணம் : ஓட்டுநர் உரிமம் ரத்து - வாகனம் பறிமுதல்!

வியாழன் 14, நவம்பர் 2024 4:35:11 PM (IST)



நாகர்கோவிலில் இரு சக்கர வாகனத்தில் 4பேர் பயணம் செய்த சம்பவத்தில் போலீசார் ரூ.7200 அபராதம் விதித்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் உட்கோட்டத்தில் சாலை விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின், மற்றும் காவலர்கள் இராமன் புதூர் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். 

அப்போது பறக்கையைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் பின்புறம் மூன்று நபர்களை ஏற்றிக்கொண்டு, மொத்தம் நான்கு பேராக ஓட்டி வந்தனர். மேற்படி நான்கு நபர்கள் வந்த இருசக்கர வாகனத்திற்கு ரூ.7200 அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

உண்மை ஆனால் யாரும் நம்பப்போவது இல்லைNov 14, 2024 - 05:22:34 PM | Posted IP 172.7*****

அது இருக்கட்டும் , தமிழகத்தில் நிறைய ஓட்டை பஸ்கள் 52 முதல் 60 பேர் வரை பயணிக்க கூடிய பேருந்துகளில் அளவுக்கு அதிகமான 75 பேர் க்கு மேல் ஏத்திட்டு போறாங்க அதை பிடித்தால் தமிழக அரசுக்கு லட்சக்கணக்கான வருமானம் கிடைக்கும்ல. அதையும் கவனிங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory