» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழந்தைகளுக்கான நடைபயண பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்

வியாழன் 14, நவம்பர் 2024 3:14:43 PM (IST)



கன்னியாகுமரியில் குழந்தைகள் நலன் - சிறப்பு சேவைகள் துறை, மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகளுக்கான நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 மற்றும் சர்வதேச குழந்தைகளுக்கெதிரான தீங்கிழைத்தல் தடுப்பு தினம் நவம்பர் 19 ஆகிய தினங்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான நடைபயண பேரணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார். 

”நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வது ஆகும்” என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, கையெழுத்து பிரச்சாரத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள். இறுதியாக எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து கோட்டார் சமூக சேவை சங்கம் மூலம் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு பிரிவு) சந்திரசேகரன், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) விஜயமீனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, குழந்தைகள் உதவி மையம் மாவட்ட சுகாதார அலுவலக பணியாளர்கள், குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் பல்வேறு துறை அலுவலர்கள், பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, அரசு ஆயுர்வேத கல்லூரி, டாக்டர் ஜெயசேகரன் செவிலியர் கல்லூரி, கோட்டார் சமூக சேவை நிறுவனம், மார் கிறிசோசம் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory