» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு ரப்பர் கழகத்தை மேம்படுத்த வேண்டும்: முதல்வருக்கு விஜய் வசந்த் எம்பி கோரிக்கை!

வியாழன் 14, நவம்பர் 2024 11:18:50 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தை மேம்படுத்த வேண்டும் எனற தமிழக முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நலிந்து வரும் அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டுமென தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்-க்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார் 

அதில், "ரப்பர் விவசாயம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக முக்கியமான ஒரு விவசாயமாக கருதப்படுகிறது. ஆயிரக்கணக்கனோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த விவசாயம் காரணமாக பலன் அடைகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 1956 ஆம் ஆண்டு 4785 ஹெக்டரில் அரசு ரப்பர் தோட்டம் நிறுவப்பட்டது. பின்னர் 1984 ஆம் ஆண்டு இது அரசு ரப்பர் கழகமாக மாறியது.

அரசு ரப்பர் கழகத்தின் கீழ் உள்ள ரப்பர் காடுகள் படிப்படியாக குறைந்து வருவதை தடுத்து ரப்பர் கழகத்தினை மீட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன் காத்திட ஆவன செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.  இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory