» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

செவ்வாய் 23, ஜூலை 2024 8:19:22 AM (IST)

நெல்லை, ஆவடி, ஓசூர், கடலூர், சேலம் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆவடி மாநகராட்சி ஆணையர் சேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநில விருந்தினர் மாளிகையின் வரவேற்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மாவட்ட வருவாய் அதிகாரி துர்கா மூர்த்தி, வணிகவரிகள் இணை ஆணையராக (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கவிதா ராமு, அருங்காட்சியகங்கள் இயக்குனராக மாற்றப்பட்டார்.

பவர்பின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அம்பலவாணன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவனத்தின் இயக்குனரானார்.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவனத்தின் இயக்குனர் அமிர்த ஜோதி, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலங்கள் மற்றும் கணக்குகள் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

பொதுத்துறையின் முன்னாள் துணைச் செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையரானார்.

நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது மேலாளர் (சந்தை) சதீஷ், ஈரோடு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் கூடுதல் ஆட்சியராக (மேம்பாடு) இடமாற்றம் செய்யப்பட்டார்.

கைத்தறி ஆணையர் விவேகானந்தன், தமிழ்நாடு ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஹனிஷ் சாப்ரா, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ.வின் தலைமை செயல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory