» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உவரி கோவிலுக்கு பூட்டு: தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

வியாழன் 17, அக்டோபர் 2024 4:11:55 PM (IST)


உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலை பூட்டிய தமிழக அரசுக்கு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி கிராமம் உள்ளது. கன்னியாகுமரி-திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த ஊரில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடலோரத்தில் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு சுற்று வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம்.

இந்தக் கோயிலில் பரம்பரை அறங்காவலாராக ராதாகிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார். கோயிலில் உள்ள பூசாரிகள் தாங்கள் கோயிலின் பரம்பரை அர்ச்சர்கள் எனவும், எங்களை கோவில் பரம்பரை அறங்காவலர் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பரம்பரை அறங்காவலரின் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு கோயில் அர்ச்சகர்கள் நடக்க வேண்டும், பரம்பரை அர்ச்சகர்கள் என்று கூற உரிமை கிடையாது, அவர்களை பூஜை செய்ய அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோயில் பூசாரிகள் இந்து அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை அமல்படுத்தும் படி ஆணையம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சுப்புலட்சுமி, ஆலய நிலங்கள் தனி தாசில்தார் இந்திராகாந்தி மற்றும் போலீசார் உவரி கோயிலுக்கு வந்தனர்.

கோயில் அர்ச்சர்களை அழைத்து, நீதிமன்ற உத்தரவு குறித்து அதிகாரிகள் கூறினர். எனினும், இதை ஏற்க மறுத்த கோயில் அர்ச்சகர்கள் சுயம்புலிங்க சுவாமி, பிரம்ம சக்தி அம்மன் கோயில்களில் மேல் பூட்டு போட்டு பூட்டி போராட்டம் செய்தனர். கோயில் சார்பாக நியமிக்கப்பட்ட அர்ச்சர்களை பணி செய்ய விடாமலும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். நேற்று காலையில் தொடங்கிய அர்ச்சகர்கள் போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. இதையடுத்து கோவிலுக்கு பூட்டு போடப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருக்கோவில்களில் பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி வழிபடத் தேவையான அடிப்படை வசதிகளை  செய்வதற்குத்தான்  நிர்வாகமும், அறநிலையத்துறையும், காவல்துறையும் இருக்க வேண்டுமே தவிர அர்ச்சகர்களை வெளியேற்றி கோவிலை பூட்டுவதற்கு அல்ல. வேற்று மத வழிபாட்டு தலங்களில் இதுபோல் தமிழக அரசோ காவல்துறையோ சென்று பூட்டி விட முடியுமா? திமுக அரசின் இந்து விரோத போக்கின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

மேலும் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் உள்ள நகைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது கையகப்படுத்தி அளவீடு செய்து வருவதாக தெரிகிறது. இதிலிருந்து பக்தர்களின் நலனும் கோவிலின் நலனிலோ துளியும் அக்கறை இல்லை, கலெக்ஷன் மட்டுமே அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசின் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

திருக்கோவில் நிர்வாகமானது பக்தர்களின் வசதிக்கும் திருக்கோவில் வளர்ச்சிக்கும் எந்தவித உதவியும் ஏற்பாடும் செய்யாமல், பல ஆண்டுகளாக கோவில் வளர்ச்சிக்கு தடைக்கல்லாகவே இருந்து வருகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இது அறநிலையத்துறைக்கும் தெரியாமல் இல்லை.பக்தர்கள் வழிபட செல்லும் பாதைகள் எல்லாம் கம்பி வைத்து அடைப்பது போன்று தொடர்ந்து பக்தர்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகளை திருக்கோவில் நிர்வாகம் இடையூறு செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறையின் இந்த செயலை கண்டித்து, சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தும் போராட்டத்திற்கு இந்துமுன்னணி முழு ஆதரவை அறிவித்துள்ளது. மேலும், இந்துமுன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

V. ThirumaniOct 17, 2024 - 05:58:43 PM | Posted IP 172.7*****

Worst,,,, administration,, in. Uarykoil,, suyambulingaswamy,,, will, help...... That man.. Jeyikkum... All. Madams... Constructed.. By, public,,, devotees,,, but,, Ramakrishnan,,,, want, to, acquire, all... He is not,,, think. It,, He, want, to, occupy, them,,, He. Is. Not, willing. To. Develop... He. His. Family... Only develop, suyambilongamswamy .is... Powefulsivaperuman... He. Will, be. On the side. Oftharmam... Mustang... Kindness.... Gurukkal.. Will. Get. SucceeswiththehelpofSriSuyambulingamswamy

V. ThirumaniOct 17, 2024 - 05:45:15 PM | Posted IP 162.1*****

I,want,to,tell,,,Gurukkal. Must. Appealswamy,, will, guide. Them

V. ThitumaniOct 17, 2024 - 05:28:59 PM | Posted IP 172.7*****

Ramakrishnan,,, parambaraiArankavalar....is. doing.... This, activities....400.years,,,the. Gurukkal.. Is.. In. Temple,,, Gurukkal. Misfile,,,appeal. For. This cruel... Unwanted. Activity by,, Aidan,, They,, must, appeal... They. Will, get, success.. In. Future,,,, Srisuyambulingaswamy,, will, help,,, gurukkal... Thillaitheetchifargal... Are.. Similar. To, Gurukkal.... Very. SoonTharmam... Will, get, success

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory