» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து!

வியாழன் 17, அக்டோபர் 2024 4:28:19 PM (IST)

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.

இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை. நேற்று மதியத்துக்கு பிறகு ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. இதையடுத்து ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்து சென்றது. அப்போது சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் எந்த சலனமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சென்னையில் கனமழை முற்றிலும் நின்று 24 மணி நேரம் கடந்த பிறகும் பயணிகள் பலர் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். இதனால் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரவிருந்த 8 விமானங்களின் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் நாளை முதல் வழக்கமான பயணிகளுடன் விமான சேவைகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண் அடித்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:56:49 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory