» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா : வாகனங்கள் செல்லும் வழிகள் அறிவிப்பு

சனி 20, ஜூலை 2024 4:43:51 PM (IST)

சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு நாளை (21.07.24) அன்று வாகனங்கள் செல்லும் வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

1.திருநெல்வேலி ரோடு வழியாக சங்கரன்கோவில் இராஜபாளையம், மதுரை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநெல்வேலி ரோடு சண்முகநல்லூர் விளக்கு வழியாக சின்னகோவிலான்குளம், நடுவகுறிச்சி, சங்கரன்கோவில் இராயில்வே பீடர் ரோடு, TB ஜங்சன் வழியாக இராஜபாளையம் செல்ல வேண்டும்.

2.இராஜபாளையம் ரோடு வழியாக திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் இராஜபாளையம் சாலை State bank  சாலை வழியாக கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுக்கடை முக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக MP House கழகுமலை ரோடு, இராமநாதபுரம் விளக்கு வலது புறம் திரும்பி  இராமநாதபுரம், நெடுங்குளம் வழியாக திருநெல்வேலி செல்ல வேண்டும்.

3.புளியங்குடி, சுரண்டை, தென்காசியில்  இருந்து திருவேங்கடம் கோவில்பட்டி செல்லும் வாகனங்கள் அனைத்தும் இராஜபாளையம் ரோடு State bank  சாலையில் உள்ளே சென்று கீதாலயா தியேட்டர் ரோடு, கருவாட்டுக்கடை முக்கு வழியாக திருவேங்கடம் கோவில்பட்டி செல்ல வேண்டும்.

4.கழகுமலை, திருவேங்கடம் சாலையில் இருந்து இராஜபாளையம் , தென்காசி, புளியங்குடி, சுரண்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம் சாலை செல்வா சில்க்ஸ் சாலையில் வலது புறம் திரும்பி வையாபுரி மருத்துவமனை ஜங்சன், ஐந்து வீட்டுமனை வழியாக இராஜபாளையம் சாலையில் வந்து செல்ல வேண்டும்.

5.தற்காலிக பேருந்து நிலையம் வந்து திரும்பி செல்லும் சிறப்பு பேருந்து தற்காலிக பேருந்து நிலையம் வரை அனுமதிக்கப்படும்

1)திருநெல்வேலி ரோடு கோமதியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

2)இராஜபாளையம் ரோடு கல்மண்டபம்.

3)சுரண்டை ஜங்சன்.

4)புதிய பேருந்து நிலையம் சங்கரன்கோவில்

6.கனரக வாகனங்கள்: லாரி, டிப்பா, டாரஸ் ட்ரைலர் போன்ற வாகனங்கள் ஆடிதபசு அன்று காலை 07.00 மணி முதல் இரவு 12.00 மணிவரை சங்கரன்கோவில் சாலையில் வர அனுமதி இல்லை.

1.இராஜபாளையம் வழியாக வரும் கனரக வகனங்கள் பருவக்குடி வழியாக திருவேங்கடம் கோவில்பட்டி செல்ல வேண்டும்.

2.புளியங்குடி சாலையில் புளியங்குடி சிந்தாமணியில் இருந்து இராஐபாளையம் செல்ல வேண்டும்.

3.திருநெல்வேலி சாலையில் வரும் கனரக வாகனங்கள் பனவடலிசத்திரத்தில் இருந்து   அய்யாபுரம், கழுகுமலை வழியாக செல்ல வேண்டும்.

4.சுரண்டை வழியாக  வரும் கனரக வாகனங்கள் வீரசிகமணியில் இருந்து புளியங்குடி, சிந்தாமணி வழியாக இராஐபாளையம் செல்ல வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory