» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், காவல் துறை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது, நாடு முழுவதும் போராடிய இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு போராடி மத்திய அரசை எதிர்கொண்டு வென்று காட்டியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். திமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையும் அதுவே ஆகும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர்: "தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையைப் பயன்படுத்தாமல், அரசுக்கு எதிராகப் பேசுபவர்களை ஒடுக்குவதற்கே காவல் துறை பயன்படுத்தப்படுகிறது. போராடிய மாணவர்கள் மீதும் காவல் துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
உயிரிழந்த அருணாச்சலம் குடும்பத்தினருக்கு ஆறுதல்:
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அருணாச்சலத்தின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் பி. கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, "காவல்துறை தாக்கியதால்தான் எங்கள் மகன் உயிரிழந்தான்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அருணாச்சலத்தின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர். அதற்குப் பதிலளித்த கனிமொழி, "இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திமுக எப்போதும் உங்கள் குடும்பத்துடன் இருக்கும்" என்று உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)

7,000 வாட் வரி வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தல் : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மனு!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:08:07 AM (IST)

ரோச் பார்க் பகுதியில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
சனி 25, ஜூலை 2026 9:33:13 PM (IST)

தூத்துக்குடியில் 'ஓ.எல்.எஸ் எக்ஸ்போ பொருட்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 9:27:40 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடி பவனி கோலாகலம்!
சனி 25, ஜூலை 2026 9:19:22 PM (IST)








