» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்: 31 பேர் நேரில் மனு அளிப்பு!
புதன் 17, ஜூன் 2026 8:38:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 31 நபர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவித்து எளிதில் தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் மாவட்ட காவல் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (17.06.2026) சிறப்பு முகாம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற முகாமிற்குத் திருநெல்வேலி மாநகரம் மேற்கு காவல் துணை ஆணையரும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளருமான விஜயகுமார் தலைமை தாங்கிப் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 31 மனுதாரர்கள், தங்களின் நிலப் பிரச்சினைகள், குடும்பத் தகராறுகள் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குறைகளை எஸ்பி விஜயகுமாரிடம் நேரடியாகத் தெரிவித்துப் புகார் மனுக்களை அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை முழுமையாகக் கேட்டறிந்த மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், பெறப்பட்ட 31 மனுக்களையும் பரிசீலனை செய்தார். பின்னர் அந்தந்த உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, இந்த மனுக்கள் மீது எவ்விதத் தொய்வுமின்றி உடனடியாகச் சட்டப்பூர்வ விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 17, ஜூன் 2026 8:50:57 PM (IST)

மக்களை ஏமாற்றவே தவெக அரசு வெள்ளை அறிக்கை நாடகம்: கீதா ஜீவன் குற்றச்சாட்டு
புதன் 17, ஜூன் 2026 8:07:26 PM (IST)

கோவில்பட்டியில் ஜூன் 25-ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்!
புதன் 17, ஜூன் 2026 8:01:36 PM (IST)

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!
புதன் 17, ஜூன் 2026 7:56:49 PM (IST)

அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்துக் கொள்ளை முயற்சி - மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 17, ஜூன் 2026 7:50:59 PM (IST)

தூத்துக்குடி மேலூர் 4-ஆம் இரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை!
புதன் 17, ஜூன் 2026 7:44:57 PM (IST)









