» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் ஜூன் 25-ல் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்!

புதன் 17, ஜூன் 2026 8:01:36 PM (IST)

கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் விண்ணப்ப முகாம், வரும் ஜூன் 25ஆம் தேதி (வியாழக்கிழமை) சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி சார் ஆட்சியர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25.06.2026 (வியாழக்கிழமை) காலை 11:00 மணியளவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, சார் ஆட்சியர் தலைமையில் நேரடி முன்னிலையில் நடைபெற உள்ளது.

இக்குறைதீர்க்கும் நாள் முகாமில், கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி  விளாத்திகுளம்  எட்டயபுரம்  கயத்தார்  ஓட்டப்பிடாரம் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். 

மேற்கண்ட வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான மாதாந்திர உதவித்தொகை, உபகரணங்கள், இலவச வீட்டு மனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் கோரும் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை உரிய ஆவணங்களுடன் அளித்துப் பயன்பெறுமாறு கோவில்பட்டி சார் ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory