» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவிக்கு விடுதியில் தங்க அனுமதி மறுப்பு: தாயார் திடீர் போராட்டம் - கோவில்பட்டியல் பரபரப்பு!

புதன் 10, ஜூன் 2026 12:55:57 PM (IST)



கோவில்பட்டியில் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில், பிளஸ் 2 மாணவிக்கு விடுதி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் அவரது தாயார் விடுதி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி, கடந்த கல்வியாண்டில் மாணவி ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அவர் 12-ஆம் வகுப்பு  படிப்பைத் தொடர வேண்டிய சூழலில், மீண்டும் அதே விடுதியில் தங்கிப் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், விடுதி நிர்வாகத் தரப்பில் அந்த மாணவியைச் சேர்க்கக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. "மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று உரிய அனுமதி பெற்று, அவரிடம் கையெழுத்து வாங்கி வந்தால் மட்டும்தான் விடுதியில் மீண்டும் சேர்க்க முடியும்" எனக் கூறி விடுதி காப்பாளர் மற்றும் ஊழியர்கள் மாணவியைச் சேர்க்க மறுத்து திருப்பி அனுப்பியதாகத் தெரிகிறது.

ஏழைப் பின்னணியைக் கொண்ட அந்த மாணவியின் குடும்பத்தினரால் உடனடியாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அனுமதி வாங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடித்துள்ளன. மேலும், விடுதி அனுமதிக் காலம் முடிவடைவதோடு, பள்ளிகள் திறந்து வகுப்புகள் தொடங்கிவிட்ட சூழலில், விடுதி இடம் கிடைக்காததால் மாணவியால் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர முடியாமலும் தவிக்கும் அவல நிலை உருவானது.

விடுதி நிர்வாகத்தின் இந்த அதிரடி மற்றும் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தங்களது மகளின் கல்வி உரிமைக்கு நியாயம் கோரியும், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இன்று கோவில்பட்டி சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியின் நுழைவாயில் முன்பாக திடீரென அமர்ந்து கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory