» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 44 காலிப்பணியிடங்கள் : ஜூன் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, ஜூன் 2026 11:02:53 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் (National Health Mission) கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் வெளியிட்டுள்ளது. தகுதியுடைய நபர்கள் வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மொத்தம் 20 பிரிவுகளின் கீழ் 44 காலிப்பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளன. அதன் விபரம் பின்வருமாறு:
காலிப்பணியிடங்கள் விவரம் & எண்ணிக்கை
1 Audiologist and Speech Therapist 1
2 Therapeutic Assistant (Female) 1
3 District Quality Consultant 1
4 Multipurpose Hospital Worker 6
5 Security Guard 2
6 Librarian cum Statistician 1
7 Occupational Therapist 1
8 Programme cum Administrative Assistant 1
9 Dental Technician 1
10 Medical Officer 2
11 Van Cleaner 1
12 Account Assistant 1
13 Hospital worker 2
14 TB Health Visitor 1
15 Radiographer 3
16 Health Inspector Gr. II 9
17 ANM 1
18 Audio Metric Assistant 1
19 Operation theatre technician 3
20 Nursing Assistant 4
மொத்தம் 44
முக்கிய நிபந்தனைகள்: இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவை. எந்தவொரு காலக்கட்டத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படும் நபர்கள் 11 மாதப் பணி நியமனத்திற்கான ஒப்பந்தப் பத்திரம் அளிப்பது கட்டாயமாகும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேவைகள் மாற்றத்திற்குட்பட்டது.
விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம், கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு ஆகிய விபரங்களைத் தூத்துக்குடி மாவட்ட இணையதளமான [https://thoothukudi.nic.in](https://thoothukudi.nic.in) என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேவையான கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களைச் சுய சான்றொப்பமிட்டு (Self-Attested), 20.06.2026 மாலை 5 மணிக்குள் கீழ்வரும் முகவரிக்கு நேரியலாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்,
மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி - 628 002.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)

மாணவிக்கு விடுதியில் தங்க அனுமதி மறுப்பு: தாயார் திடீர் போராட்டம் - கோவில்பட்டியல் பரபரப்பு!
புதன் 10, ஜூன் 2026 12:55:57 PM (IST)

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
புதன் 10, ஜூன் 2026 12:48:48 PM (IST)

முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குறித்து அவதூறு : காவல் நிலையத்தில் நிர்வாகிகள் புகார்
புதன் 10, ஜூன் 2026 12:29:59 PM (IST)

லாரிகளின் விதிமீறல்: விபத்து அபாயத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் - அரசு நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, ஜூன் 2026 11:59:16 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)









