» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குறித்து அவதூறு : காவல் நிலையத்தில் நிர்வாகிகள் புகார்

புதன் 10, ஜூன் 2026 12:29:59 PM (IST)



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோரைக் குறித்தும், கட்சியைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலமாகத் தரக்குறைவான விமர்சனங்கள் பரப்பப்பட்டு வந்துள்ளன.

இவ்வாறு சமூக ஊடகங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்பும் செயலில், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை அலி என்பவர் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.  தலைவர்களைப் பற்றி அவதூறு பரப்பிய அந்த நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டக் குழுவின் சார்பில், மாவட்டச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆறுமுகநேரி காவல் பிரிவில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். 

அந்த மனுவில், சமூக வலைத்தளங்கள் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறுகளைப் பரப்பிய காயல்பட்டினம் டீக்கடை அலி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory