» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தமிழகத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி யுடன் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் சந்தித்து பசுமை பயணம் குறித்து விளக்கினார்.
போலீஸ் வட்டாரத்தில் டி.கே.ஆர் என்றழைக்கப்படுபவர் டி. கே.ராஜேந்திரன். தமிழக போலீஸ் டி.ஜி.பியாக இருந்தவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். அவரிடம் பிறர் படிக்க வேண்டியது எளிமை. தற்போது தமிழக தடகளச் சங்கத்தின் தலைவராக வால்டர் தேவாரத்தை தொடர்ந்து விளங்குகிறார். டி.கே ராஜேந்திரனை சமூக நல ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ.திருமாறன் சந்தித்து தமது சேவைகள் குறித்து விளக்கினார். முக்கியமாக தற்போது தமிழகத்தில் நாலாதிசையிலும் எதிரொலிக்கும் விதைப்பந்து புரட்சி குறித்து விளக்கினார்.
விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் மாதிரிகளை திருமாறன் போலீஸ் டி.ஜி.பி டிகே ஆருக்கு வழங்கினார். வீசிய விதைப்பந்துகளால் பூமியின் மர எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். அதைவிட மரம் வளர்க்கும் எண்ணம் மாணவ மாணவிகளிடம் நிச்சயம் துளிர்விடும் என திருமாறன் கூறியதை டி. கே.ஆர் ஆமோதித்தார். இந்த சந்திப்பின்போது பசுமை ஜவஹர் உடன் இருந்தார். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் விதைப்பந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் துவங்கிட திட்டமிடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் : எஸ்பி அபிஷேக் குப்தா திறந்து வைத்தார்!
ஞாயிறு 31, மே 2026 6:00:46 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)

கார் மீது லாரி மோதி பெண் பலி - 5 பேர் படுகாயம்: விசாகத் திருவிழா முடிந்து திரும்பியபோது சோகம்!
ஞாயிறு 31, மே 2026 9:38:55 AM (IST)










