» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் : எஸ்பி அபிஷேக் குப்தா திறந்து வைத்தார்!
ஞாயிறு 31, மே 2026 6:00:46 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இன்று ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகப் பகுதியில் காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இன்று ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார்.
பின்னர் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமராக்களின் கண்காணிப்பு திரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் செல்வராஜ், குரு வெங்கட்ராஜ் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் இணை ஆணையர் ராமு ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)

கார் மீது லாரி மோதி பெண் பலி - 5 பேர் படுகாயம்: விசாகத் திருவிழா முடிந்து திரும்பியபோது சோகம்!
ஞாயிறு 31, மே 2026 9:38:55 AM (IST)










