» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் இருந்து நிலைதடுமாறி விழுந்து வாலிபர் பலி!
ஞாயிறு 31, மே 2026 9:35:41 AM (IST)
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவி தெருவைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (34). இவர் கடந்த 28-ஆம் தேதி தனது நண்பரான பாலமுருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றுள்ளார். அங்கு இருவரும் இணைந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
கோவிலில் தரிசனத்தை முடித்த பின்னர், மாரிசெல்வமும் பாலமுருகனும் அருகில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்து மீண்டும் புதியம்புத்தூர் திரும்புவதற்காக இருவரும் தங்களது பைக்கில் ஏறியுள்ளனர். பாலமுருகன் பைக்கை இயக்கத் தயாரான போது, மாரிசெல்வம் பைக்கின் பின்னால் ஏறியுள்ளார்.
அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், போதையின் காரணமாக நிலைதடுமாறிய மாரிசெல்வம் பைக்கில் இருந்து அப்படியே பின்னோக்கி கீழே விழுந்தார். இதில் அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தீவிர சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதித்தனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மாரிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏரல் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் : எஸ்பி அபிஷேக் குப்தா திறந்து வைத்தார்!
ஞாயிறு 31, மே 2026 6:00:46 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)










