» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!

ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)



சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த மாவீரன் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழா இன்று (31.5.2026) அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, வல்லநாடு மணிமண்டபத்தில் அமைந்துள்ள வெள்ளையத்தேவனின் திருவுருவச் சிலைக்குப் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிலைக்குப் பூக்களைத் தூவி, மரியாதையைச் செலுத்தினார். 

விழாவில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவீரன் வீரன் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்படப் பலர் இந்த அரசு விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory