» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு : அமைச்சர் ரமேஷுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கண்டனம்!

சனி 30, மே 2026 12:09:48 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் புகழைச் சிறுமைப்படுத்தியதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் ரமேஷ் அங்குள்ள அர்ச்சகர்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தியுள்ளார். மேலும், பல தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி ஆன்மிகப் பணியாற்றி வரும் திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தையும் அவர் கடுமையாக அவமதித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு இந்த அர்ச்சகர்கள் தங்களது முழுமையான உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையைச் சாராத திரிசுதந்திர அர்ச்சகர்கள், பாரம்பரிய மரபு வழியாகக் கோயில் வழிபாட்டு முறைகளிலும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதிலும் தங்களை அர்ப்பணித்து உதவி வருகிறார்கள்." என்று அனிதா ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

பக்தன்மே 31, 2026 - 10:32:11 AM | Posted IP 104.2*****

"சுவாமி தரிசனம் செய்வதற்கு இந்த அர்ச்சகர்கள் தங்களது முழுமையான உதவிகளைச் செய்து வருகின்றனர்" அப்படியானால் காசு கொடுத்தால் தான் உதவி செய்வார்கள், ஆனால் காசு கொடுக்காவிட்டால்???? அட பிச்சைக்கார திருட்டு பயலுக. அங்கு எவனும் நல்லவர்களே கிடையாது.

என்னது இதுமே 31, 2026 - 10:29:51 AM | Posted IP 104.2*****

அந்த மூஞ்சியும் முகரையும் பாருங்க பேய் மாதிரி இருக்கு

இதுவரை உங்களுக்கு ஓட்டு போட்ட ஒருவன்மே 30, 2026 - 06:01:22 PM | Posted IP 104.2*****

பயப்படாத , பயப்படாத

ராஜாமே 30, 2026 - 12:29:04 PM | Posted IP 162.1*****

கல்குவாரி போச்சு. உள்ளூர் கொள்ளை போச்சு இனி என்ன ஆச்சு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory