» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் : ஆட்சியர் விஷுமகாஜன் தகவல்!
வெள்ளி 29, மே 2026 5:30:53 PM (IST)
பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.50,000/- வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ், இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.06.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
Bathusa Bathusaமே 29, 2026 - 10:26:48 PM | Posted IP 172.7*****
எனக்கு இரு சக்கரம் வாகனம் வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் : எஸ்பி அபிஷேக் குப்தா திறந்து வைத்தார்!
ஞாயிறு 31, மே 2026 6:00:46 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)











Bathusa Bathusaமே 29, 2026 - 10:28:17 PM | Posted IP 172.7*****