» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
வெள்ளி 29, மே 2026 8:45:48 AM (IST)
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் இடிப்பது போல் வந்த விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் மோதலில், வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகத் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர், வண்ணாரப்பேட்டை ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவரான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாரிசெல்வம் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அவர் தாளமுத்து நகர் நேரு நகரில் உள்ள ஒரு கெபி அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே தாளமுத்து நகர் சோட்டையன்தோப்பைச் சேர்ந்த சண்முக கணேசன் மகன் சந்தனராஜ் (21) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது சந்தனராஜ், மாரிசெல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது இடிப்பது போல் வண்டியை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த மாரிசெல்வம், சந்தனராஜைக் கையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து தனித்தனியே அனுப்பி வைத்தனர். மாரிசெல்வம் தன்னைத் தாக்கியதால் கடும் ஆத்திரமடைந்த சந்தனராஜ், அவரை பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது நண்பர்களான அண்ணா நகர் 12-ஆவது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமார் (20), ஆனந்த் நகரைச் சேர்ந்த ராபர்ட் மகன் ஜாய்சன் (20) மற்றும் நேரு நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் ஹரிகரன் (20) ஆகிய மூன்றுபேருடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மாரிசெல்வத்தைப் பழிவாங்கும் நோக்குடன் தீவிரமாகத் தேடி அலைந்துள்ளனர்.
அப்போது, மாரிசெல்வம் நேரு நகர் கெபி அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்த மாரிசெல்வத்தைச் 4 பேரும் சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாரிசெல்வம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 4 பேரும் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிசெல்வத்தின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், சந்தனராஜ், அவரது நண்பர்களான ஜாய்சன் மற்றும் ஹரிகரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள புவனேஷ்குமார் என்ற வாலிபரைத் தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகள் முழுமையாக தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
ஞாயிறு 31, மே 2026 8:31:12 PM (IST)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் பைக் மோதி ஏர்டெல் ஊழியர் பலி!
ஞாயிறு 31, மே 2026 8:26:47 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வாளாகத்தில் புறக்காவல் நிலையம் : எஸ்பி அபிஷேக் குப்தா திறந்து வைத்தார்!
ஞாயிறு 31, மே 2026 6:00:46 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)

மாவீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள்: வல்லநாடு மணிமண்டபத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை!
ஞாயிறு 31, மே 2026 2:35:07 PM (IST)











சட்டம் தெரிந்த ஒருவன்மே 29, 2026 - 10:25:47 AM | Posted IP 172.7*****