» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் என்.பெரியசாமி 9ஆம் ஆண்டு நினைவு தினம் : திமுகவினர், குடும்பத்தினர் மரியாதை!
செவ்வாய் 26, மே 2026 5:48:43 PM (IST)

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், கருணாநிதி, மற்றும் ராஜா பொியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன் ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 500 பேருக்கு வேஷ்டி 500 பேருக்கு சேலை, வழங்கினார்கள். மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவிந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம்: ஆதரவளிக்க சென்றவர்கள் கைது!
செவ்வாய் 26, மே 2026 5:38:29 PM (IST)

சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு: இணையதளம் தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 26, மே 2026 3:23:11 PM (IST)

தூத்துக்குடி வளர்ச்சிக்கு மோடி அரசு தந்துள்ள திட்டங்கள்: தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பட்டியல்!
செவ்வாய் 26, மே 2026 3:13:30 PM (IST)

தவறவிட்ட 16 பவுன் தங்க நகைகள் 1 மணி நேரத்தில் மீட்பு : உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்..!
செவ்வாய் 26, மே 2026 11:45:52 AM (IST)

வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை!
செவ்வாய் 26, மே 2026 11:37:59 AM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலைய ஊழியர் மீது தாக்குதல் - 4பேர் கைது!
செவ்வாய் 26, மே 2026 11:29:56 AM (IST)










